வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற வழக்கில்தலைமறைவாக இருந்தவர் கைது


வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற வழக்கில்தலைமறைவாக இருந்தவர் கைது
x

வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

டி.என்.பாளையம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 40). இவர் மீது கடம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதாக வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இவர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இதனால் ராஜாராம் மீது கோர்ட்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடம்பூர் அருகே உள்ள மாக்கம்பாளையத்தில் ராஜாராம் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடம்பூர் வனச்சரகர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இதனையடுத்து ராஜாராமை வனத்துறையினர் கோபி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story