போடியில் அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து


போடியில்  அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து
x

போடியில் அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது

தேனி

போடியில் கோட்டை கருப்பசாமி கோவில் அருகே பந்தல் கடை உள்ளது. இங்கு கடை உரிமையாளர் ஆறுமுகம் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் கடையில் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. பின்னர் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதைக்கண்ட ஊழியர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் போடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது அருகே உள்ள இரும்பு கடைக்கு தீ பரவியது. அங்கும் தீ பற்றி எரிந்தது. அதையும் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். மேலும் பக்கத்தில் உள்ள இலவம் பஞ்சு கடைக்கும் தீ பரவ ஆரம்பித்தது.

அதற்குள் சுதாரித்து கொண்ட தீயணைப்பு வீரர்கள் தீயை பரவ விடாமல் அணைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு படையினர் கூறுகையில்,மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் அடுத்தடுத்த கடைகளுக்கு பரவ இருந்த தீ அணைக்கப்பட்டது என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story