நடப்பு ஆண்டில் இதுவரை 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொலை மிரட்டல்
எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்த மன்மதராஜ் மகன் கார்த்திக் (வயது 22). இவரை குளத்தூர் போலீசார் ஒரு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கார்த்திக்கை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
200 பேர்
நடப்பு ஆண்டில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இதுவரை போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 37 பேர் உட்பட 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.