தூத்துக்குடியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக் கூடாது:அ.தி.மு.க. வக்கீல்கள் மனு
தூத்துக்குடியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக் கூடாது எனறு அ.தி.மு.க. வக்கீல்கள் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணி செயலாளர் யு.எஸ்.சேகர், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, முன்னாள் மாவட்ட அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, வக்கீல்கள் சரவணபெருமாள், சிவசங்கர், ராஜ்குமார், செண்பகராஜ், வைகுந் சங்கர், ஆதீஸ் ஆகியோர் கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், அ.தி.மு.க. பெயரைப் பயன்படுத்தி ஓ. பன்னீர்செல்வம் அணியினர் வருகிற 1-ந் தேதி தூத்துக்குடியில் பாளையங்கோட்டை ரோடு வி.வி.டி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும், இதில் அ.ம.மு.க கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்துள்ளனர். ஓ.பி.எஸ் அணியினர் நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வின் பெயரையோ, கட்சிக் கொடியையோ, கட்சியின் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளனர்.