மாவட்டத்தில்ரேஷன்கடைகள் வழக்கம்போல் இயங்கின
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான விண்ணப்பப்பதிவு முகாம் நடந்து வருகிறது. இந்த பணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக நேற்று அனைத்து ரேஷன்கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக விண்ணப்பப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து ரேஷன்கடைகளும் நேற்று திறந்து இருந்தன. இவற்றில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டன. இவற்றை பெற்றுக்கொண்ட பெண்கள் முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று பதிவு செய்து கொண்டனர்.
வழக்கமாக ரேஷன்கடை பணியாளர்களுக்கு முதல் இரண்டு வெள்ளிக்கிழமை மற்றும் கடைசி இரண்டு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். நேற்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டதால், இந்த விடுமுறையை வருகிற ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி எடுத்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.