சூழவாய்க்காலில்தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
சூழவாய்க்காலில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
ஏரல்:
ஏரல் அருகே சூழவாய்க்காலில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் ஏரல் அருகே உள்ள சூழவாய்க்காலில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சூழவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் வேங்கையன் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்க முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முக்காணி தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், சூழவாய்க்கால் பஞ்சாயத்து துணை தலைவர் இப்ராஹீம்ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்தையாபுரம்
இதேபோன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் முத்தையாபுரம் அருகே உள்ள பாரதிநகரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு பகுதி செயலாளரும், தூத்துக்குடி யூனியன் குழு துணைத்தலைவருமான ஆர்.ஆஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார்.
வாக்காளர் அடையாள அட்டை
அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. உறுப்பினர்களாக 1½கோடி பேர் ஏற்கனவே இருக்கின்றனர். தற்போது முதல்-அமைச்சர் உத்தரவுப்படி இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த புதிய உறுப்பினர் சேர்க்கையில், அவர்களது வாக்காளர் அடைய அட்டை அவசியம் இணைக்க வேண்டும். அதே போல் பூத் கமிட்டியிலும் முறையாக தலைமை கழகம் கேட்டு கொண்டபடி உண்மையான முகவரியுடன், அதை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தவறு இருந்தால் முதல்-அமைச்சர் அதை நீக்கி விடுவார். இன்னும் ஓராண்டில் எம்.பி தேர்தல் வரவுள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாத அளவில் உறுப்பினரை சேர்த்து. இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும். நாம் உறுப்பினரை சேர்ப்போம் உறுப்பினர் ஆவோம்' என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாநில விவசாய அணி துணை செயலாளருமான முருகவேல், முன்னாள் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் வி.பி.ஆர்.சுரேஷ், குலையன்கரிசல் விவசாயிகள் சங்க தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.