செய்துங்கநல்லூர் அருகே காட்டுக்குள்தற்கொலை செய்தவர் உடலை 2 கி.மீ. சுமந்து சென்ற போலீசார்


செய்துங்கநல்லூர் அருகே காட்டுக்குள்தற்கொலை செய்தவர் உடலை 2 கி.மீ. சுமந்து சென்ற போலீசார்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூர் அருகே காட்டுக்குள் தற்கொலை செய்தவர் உடலை 2 கி.மீ. சுமந்து சென்ற போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

செய்துங்கநல்லூர் அருகே காட்டு பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் உடலை 2 கி.மீ. தூரம் சுமந்து சென்ற போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

காட்டுக்குள் பிணம்

செய்துங்கநல்லூர் அருகிலுள்ள விட்டிலாபுரம் காட்டுக்குள் ஆண் பிணம் ஒன்று தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்பநாபபிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர்கள் கருத்தையா, மாரியப்பன், அஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவ காட்டுக்குள் ெசன்று ஆய்வு ெசய்தனர்.

சுமார் 2 கி.மீ. சென்ற நிலையில் நடுக்காட்டில் ஒருவர் பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். உடல் அழுகியநிலையில் துர்நாற்றம் வீசியது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க செய்துங்கநல்லூர் பகுதியில் ஆட்களுக்கு தகவல் கொடுத்தனர்.

பிணத்தை சுமந்த போலீசார்

பொங்கல் பண்டிகை தினமாக இருந்ததால், யாரும் உடலை காட்டுக்குள் இருந்து தூக்கி வர சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் 2 கிலோ மீட்டர் தூரம் இறந்தவரின் உடலை போர்வையில் சுற்றி சுமந்தவாறு விட்டிலாபுரம் வள்ளூவர் காலனி அருகே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

சகோதரியிடம் உடல் ஒப்படைப்பு

விசாரணையில், இறந்தவர் சென்னை சாலிகிராமம் பொன்னுச்சாமி மகன் அரசவன் (வயது 46) என்றும், அவர் சில மாதங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். சென்னையிலிருந்து விட்டிலாபுரத்திலுள்ள சகோதரி சீதாலெட்சுமியை பார்க்க வந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர் காட்டுக்கள் சென்று ்தற்கொலை செய்து கொண்டதும் போலீசாருக்கு தெரிய வந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை சகோதரியிடம் ேபாலீசார் ஒப்படைத்தனர்.

பொதுமக்கள் பாராட்டு

தற்கொலை செய்து கொண்டவரின் அழுகிய நிலையில் இருந்த உடலை காட்டுக்குள் இருந்து 2 கி.மீ. போலீசார் சுமந்து வந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. போலீசாரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story