கோட்டை ஈஸ்வரன் கோவிலில்குருப்பெயர்ச்சி விழா
கோட்டை ஈஸ்வரன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது
ஈரோடு
மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் நேற்று பிரவேசம் அடைந்தார். இதையொட்டி குருப்பெயர்ச்சி விழா ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் கமலாநகரில் உள்ள மாதேஸ்வரி உடனமர் மாதேஸ்வரர் சாமி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் ஈரோடு சூரம்பட்டியில் உள்ள சமயபுர மாரியம்மன் கோவிலிலும் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மேலும், குருபகவானுக்கும், நவக்கிரக குருபகவானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Next Story