பேய்க்குளத்தில் நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம்


பேய்க்குளத்தில் நாம்தமிழர் கட்சி  பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:38 PM IST)
t-max-icont-min-icon

பேய்க்குளத்தில் நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சுப்பையா பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் பேசுகையில், எல்லா மரபணுக்களும் மாற்றப்பட்டு உணவுகள் நஞ்சாகி விட்டது. இப்போது மாடுகளுக்கு வைக்கோல் கிடைக்காத நிலை உள்ளது. நாங்கள் உங்களிடம் ஓட்டுக்காக பேசவில்லை நாட்டுக்காக பேசுகிறோம். எதிர்கால சந்ததியினர் தமிழர்களாக இருந்து சிந்தித்து செயல்பட வேண்டும். ஆடுமாடு வளர்க்க இப்பொழுது ஆள் இல்லை. இந்த சூழ்நிலை மாற வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன், மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் சிம் பாய், மாநில மாணவரணி பாசறை அமைப்பாளர் அபு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பாண்டி உட்பட ஆழ்வார் திருநகரி ஒன்றிய கட்சி நிர்வாகிகளும், சாத்தான்குளம் ஒன்றிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.


Next Story