கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி பணி தீவிரம்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்  2-ம் போக நெல் சாகுபடி பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக ெநல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் தொடங்கி பழனிசெட்டிப்பட்டி வரை முல்லைப்பெரியாறு அணை பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகின்றன. முதல்போக சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடந்து முடிந்தன. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் நேற்று 134.55 கன அடியாக இருந்தது. இதையடுத்து 2-ம் போக சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். இதற்காக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தை டிராக்டர்கள் மூலம் உழுது, நாற்று நடுவதற்காக காளை மாடுகளை பூட்டி பரம்பு அடித்து நிலத்தை சமன்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story