கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக சாகுபடிக்கான நெல் விதைகள் இருப்பு: வேளாண்மை அதிகாரி தகவல்


கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்  2-ம் போக சாகுபடிக்கான நெல் விதைகள் இருப்பு:  வேளாண்மை அதிகாரி தகவல்
x

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடிக்கான நெல் விதைகள் இருப்பு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

தேனி

கம்பம் பள்ளதாக்கு பகுதியில் முதல்போக சாகுபடி பணிகள் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கியது. தற்போது வயல்களில் நெல் பயிர்கள் விளைந்து ஓரிரு வாரங்களில் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது. இந்நிலையில் 2-ம் போக சாகுபடிக்கான நெல் விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கம்பம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கம்பம் வட்டாரத்தில் சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கோ-51, என்.எல்.ஆர்-34449 ரக நெல் விதைகள் கூடலூர் துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் காமயகவுண்டன்பட்டி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கோ-51 நெல் ரகமானது ஏக்கருக்கு அதிக மகசூல் தரக்கூடியதாகும். இந்த ரக நெல் 105 நாள் முதல் 110 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகும். மேலும் பூச்சி தாக்குதலுக்கான எதிர்ப்பு திறன் கொண்டது. நெல் ரகங்களுக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்திள் கீழ் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

எனவே 2-ம் போக நெல் சாகுபடிக்கு கம்பம் வட்டார விவசாயிகள் வேளாண்மைத் துறையினரால் வழங்கப்படும் கோ-51, என்.எல்.ஆர்-34449 ரக நெல் விதைகள், பூச்சிகொல்லி மருந்துகள், உயிர் உரம், நுண்ணூட்ட உரம் ஆகியவற்றை வேளாண்மைத்துறை அலுவலகத்தில் வாங்கி பயனடைந்து ெகாள்ளலாம். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.


Related Tags :
Next Story