தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 649 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறையத்தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 649 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 60,810 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 906 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 35 லட்சத்து ,16,146 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது வரை 6 ஆயிரத்து 631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 602 பேரும், கோவையில் 655 பேரும், செங்கல்பட்டில் 397 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.