கீழ்பவானி வாய்க்காலில் 'கான்கிரீட் தளம் அமைத்தால் தேர்தலை புறக்கணிப்போம்';கோபி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு


கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் தேர்தலை புறக்கணிப்போம்;கோபி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு
x

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கோபியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு

கடத்தூர்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கோபியில் வைக்கப்பட்டுள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கான்கிரீட் தளம்

கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது பணி நிறுத்தப்பட்டது.

எதிர்ப்பு பேனர்

இந்தநிலையில் தற்போது கீழ்பவானி வாய்க்காலில் ஆங்காங்கே கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது. இதற்கு சில விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோபி அருகே உள்ள உக்கரம் மில்மேடு, வண்டிபாளையம் பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. 'கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால் 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்' என்று பேனரில் எழுதப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story