கலெக்டர் அலுவலகத்தில்வனவேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகத்தில்வனவேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 5:38 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வன வேங்கைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். வீடு இல்லாத குறவர் பழங்குடி மக்களுக்கு வீடு வழங்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதியிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், 'தேனி மாவட்டத்தில் பல இடங்களில் குறவர் பழங்குடியின மக்கள் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்த வீடு, நிலம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு தேனியில் வாடகைக்கு வீடு கொடுக்கவும் மறுக்கிறார்கள். இவர்களுக்கு வீடு கேட்டு ஏற்கனவே மனு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 110 குடியிருப்புகளில் இந்த மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Next Story