நாடாளுமன்ற தேர்தலில்அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு கட்சியினர் பாடுபட வேண்டும்:எஸ்.பி.வேலுமணி பேச்சு
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு கட்சியினர் பாடுபட வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்த பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நேற்று தூத்துக்குடியில் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தலைமை நிலைச் செயலாளருமான எஸ்.பி.வேலுமனி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசினார்.
அப்போது, அ.தி.மு.க. வீரவரலாறு எழுச்சி பொன்விழா மாநாடு மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டில் நீங்கள் எழுச்சியோடு பங்கேற்றீர்கள். அது, இந்தியா முழுவதும் உற்று நோக்கும் மாநாடாக அமைந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றிக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும். விரைவில் சட்டமன்ற தேர்தலும் வரும். ஆகையால் அனைவரும் உற்சாகமாக பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்கும் வகையில் உழைக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் அ.தி.மு.க.அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, நிர்வாகி பழக்கடை திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.