தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துறையில் பயன் படுத்தப்பட்ட 57 பழைய வாகனங்கள் பொது ஏலம்


தூத்துக்குடி மாவட்டத்தில்  போலீஸ் துறையில் பயன் படுத்தப்பட்ட   57 பழைய வாகனங்கள் பொது ஏலம்
x

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் துறையில் பயன் படுத்தப்பட்ட 57 பழைய வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்ட 33 மோட்டார் சைக்கிள்கள், 24 கார்கள் ஆக மொத்தம் 57 பழைய வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதனை பலர் போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி சென்றனர்.

இந்த ஏலநிகழ்ச்சியில் குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தூத்துக்குடி மோட்டார் பிரிவு ஆய்வாளர் பெலிக்சன், அரசு பணிமனை மேற்பார்வையாளர் முருகானந்தம், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story