தூத்துக்குடி சிவன் கோவிலில்2 ஜோடிக்கு இலவச திருமணம்
தூத்துக்குடி சிவன் கோவிலில் 2 ஜோடிக்கு இலவச திருமணம் நடந்தது.
தூத்துக்குடி
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் ஆண்டு தோறும் கோவில்களில் 600 ஜோடிகளுக்கு கோவில் நிதியில் இருந்து இலவச திருமணம நடத்தி வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் நேற்று 2 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. விழாவுக்கு கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். சிவன் கோவில் சுப்பிரமணிய பட்டர் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 2 கிராம் தங்கம், புத்தாடைகள், கைக்கெடிகாரம், கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. விழாவில் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் ருக்மணி மற்றும் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story