சிவகளையில் ரூ.10 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா
சிவகளையில் ரூ.10 லட்சத்தில் புதிய நூலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
ஏரல்:
சிவகளையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் திறப்பு விழா பஞ்சாயத்து தலைவர் பிரதீபா மதிவாணன் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவரும், விவசாய சங்க தலைவருமான அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிச்சையா வரவேற்று பேசினார். ஊர்வசி அமிர்தராஜ், எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மதிவாணன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஆணையாளர் சிவராஜன், மாவட்ட நூலக அலுவலர் ரங்கநாயகி, பஞ்சாயத்து துணைத்தலைவர் கைலாசம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.