கோவில்பட்டியில் 11 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி பாரதி நகரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரெட்ரிக் ராஜன் தலைமையில் போலீசார் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டை வாடகை பிடித்து புகையிலை ெபாருட்களை விற்பனை செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் மற்றும் தீபக்குமார்(வயது29) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 மூட்டை குட்கா புகையிலை, ரூ.54 ஆயிரம் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story