கோவிலில் பக்தரிடம் பணம் திருடிய பெண் சிக்கினார்


கோவிலில் பக்தரிடம் பணம் திருடிய பெண் சிக்கினார்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியிலுள்ள கோவிலில் பக்தரிடம் பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்த முடுக்குமீண்டான்பட்டி விஷ்ணு நகரைச் சேர்ந்த பரமசிவன் மனைவி கனகவேல் (வயது 54). இவர் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பூவனநாதசுவாமி சுவாமி சன்னதி முன்பு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பிரசாதம் வாங்குவதற்காக கோவிலுக்குள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு பெண் அவரது கையில் வைத்திருந்த பணப்பையை பறித்து கொண்டு தப்பி யோடினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போட்ட சத்தம் கேட்டு, சக பக்தர்கள் அந்த பெண்ணை பிடித்து கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மந்தித்தோப்பு பத்திரகாளியம்மன் கோவில் தெரு கருப்பசாமி மனைவி ரூபாதேவி ( 36) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த கனகவேலின் பணப்பைைய போலீசார் மீட்டனர். அதில் ரூ.250 இருந்துள்ளது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப் பதிவு அவரை கைது செய்தார்.


Next Story