கோவில்பட்டியில் பா.ஜனதா ஆலோசனை கூட்டம்


கோவில்பட்டியில்  பா.ஜனதா ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பா.ஜனதா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி செயற்குழு கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் என்.விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அய்யாதுரை பாண்டியன் வரவேற்று பேசினார். பட்டியல் அணி நிர்வாகிகள் சரவணகுமார், பொன்னுத்துரை, இன்னாசி முத்து, எட்டப்பன், சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அரசு ஒப்பந்த பணிகளில் பட்டியல் இன மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story