போடியில் கல்லூரிக்குள் புகுந்த சாரைப்பாம்பு
போடியில் தனியார் கல்லூரியில் சாரைப்பாம்பு புகுந்தது.
தேனி
போடி முந்தல் சாலையில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர் அறைக்குள் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். பின்னர் அவர்கள் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி அங்கு பதுங்கியிருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது சுமார் 5 அடி நீள சாரைப்பாம்பு ஆகும். இதையடுத்து அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.
Next Story