போடியில் விஷம் குடித்து மாணவி தற்கொலை
போடியில் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
தேனி மாவட்டம் போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த அய்யப்பன் மகள் மகாலட்சுமி (வயது 19). இவர், பிளஸ்-2 முடித்து வீட்டில் இருந்தார். இவரை மேல் படிப்பிற்காக பெற்றோர் போடியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால் மகாலட்சுமி அந்த கல்லூரிக்கு செல்ல விருப்பமில்லை என பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கிடையே அவர் கடந்த ஒரு வாரமாக போடியில் உள்ள கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 9-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் பூச்சி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாய் முத்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.