வெள்ளோட்டில் வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு


வெள்ளோட்டில்  வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு   பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு
x

பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு

ஈரோடு

சென்னிமலை அருகே வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ் செல்லும் வழியில் உள்ளது சின்னக்குளம். இங்கு பல ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் கரையில் உள்ள வேப்ப மரத்தில் கடந்த ஒரு வாரமாக பால் வடிந்தது.

இதுபற்றி அறிந்ததும் வெள்ளோடு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று வேப்ப மரத்திற்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதையொட்டி அந்த வேப்ப மரத்தில் மஞ்சள் துணி கட்டப்பட்டு அதில் மஞ்சள், குங்குமம் ஆகியவை வைக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், 'கடந்த வாரம் வெள்ளோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. அதிலிருந்து இந்த வேப்ப மரத்தில் பால் வடிவதால் இது மாரியம்மனின் அருளாக இருக்கும் என நினைக்கிறோம். அதனால் சுற்று வட்டார பகுதியில் இருந்து தினமும் ஏராளமானவர்கள் இங்கு வந்து வேப்ப மரத்தை தரிசித்து செல்கிறார்கள்,' என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story