சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில்விழுப்புரம்- கள்ளக்குறிச்சியை சேர்ந்த 1,061 பேர் தேர்ச்சி


சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில்விழுப்புரம்- கள்ளக்குறிச்சியை சேர்ந்த 1,061 பேர் தேர்ச்சி
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீருடைப்பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சியை சேர்ந்த 1,061 பேர் தேர்ச்சி பெற்றனா்.

விழுப்புரம்

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேர்வுப்பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 295 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் அந்த தேர்வு வாரியத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 11 மையங்களில் நடைபெற்ற சீருடை பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை எழுத விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 15,670 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 13,547 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 2,123 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான தேர்ச்சி முடிவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 871 ஆண்களும், 190 பெண்களும் என மொத்தம் 1,061 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான உடற்தகுதித்தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்ட தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


Next Story