மண்டல அலுவலகத்தில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு


மண்டல அலுவலகத்தில்  மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு
x

பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் மேயர் பி.எம்.சரவணன் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் அளிக்கும் கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது மண்டல தலைவர் பிரான்சிஸ், உதவி ஆணையாளர் டிட்கோ, உதவி செயற்பொறியாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்களுக்கு மேயர் பி.எம்.சரவணன் சீருடைகள் வழங்கினார்.


Next Story