தேனி மாவட்டத்தில் 22 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தேனி மாவட்டத்தில்  22 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 22 பேர் உள்பட மொத்தம் 56 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேனி

குண்டர் தடுப்பு சட்டம்

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, போக்சோ குற்றங்கள், திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கஞ்சா வியாபாரிகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இந்த மாதம் இதுவரை 5 கஞ்சா வியாபாரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் உள்பட மொத்தம் 56 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அத்தகைய நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சா வியாபாரிகள்

அதில், கஞ்சா வியாபாரிகள் 22 பேர், போக்சோ வழக்கில் 7 பேர், கனிம வள கடத்தலில் ஈடுபட்ட 2 பேர், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 6 பேர், சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 19 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 5 போலீஸ் உட்கோட்டங்கள் உள்ளன. அதில் அதிகபட்சமாக இந்த ஆண்டு உத்தமபாளையம் உட்கோட்ட பகுதியில் 18 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தேனியில் 16 பேர் மீதும், பெரியகுளத்தில் 14 பேர் மீதும், போடியில் 5 பேர் மீதும், ஆண்டிப்பட்டியில் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story