திருச்செந்தூர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


திருச்செந்தூர் கோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

திருச்செந்தூர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, வீரபாண்டியன்பட்டினம், குறிஞ்சி நகர், ராஜ்கண்ணா நகர், பிரசாத் நகர், கிங்காலனி, அன்னை தெரசா நகர், பாத்திமா நகர், காயாமொழி, தேரிபள்ளிவாசல், நைனார்பத்து, சீர்காட்சி, , பொத்தக்காலன்விளை, நரையன்குடியிருப்பு, கண்டுகொண்டான் மாணிக்கம், புளியன்குளம், சமத்துவபுரம், தேரிப்பனை, பிடாநேரி, வைத்தியலிங்கபுரம், வாலசுப்பிரமணியபுரம், செம்பூர், தவசிநகர், மணல்குண்டு, மானாட்டூர், லெட்சுமிபுரம், மருதூர்கரை, குமாரசாமிபுரம், மாரியம்மாள் கோவில் தெரு, வைத்தியலிங்கபுரம், தாங்கையூர், காந்தி நகர் மெயின்ரோடு, கூட்டுறவு வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், பூவன்விளை ஆகிய பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story