திருக்கோவிலூரில் 1,590 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்


திருக்கோவிலூரில்  1,590 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்  அமைச்சர் பொன்முடி வழங்கினார்
x

திருக்கோவிலூரில் 1,590 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 4 மேல் நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 1,590 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் வக்கீல் எம்.தங்கம், திருக்கோவிலூர் நகரமன்ற துணைத்தலைவர் உமாமகேஸ்வரி குணா, பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர்கள் வினோபா, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புகழேந்தி எம்.எல்.ஏ. வாழ்த்துரை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் படிக்கும்போது கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட இதர துறைகளில் கவனம் செலுத்தி அதிலும் வெற்றி பெறும் வகையில் பயிற்சி பெற வேண்டும். மேலும் மாணவர்கள் எதிர்காலத்தைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு படித்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபிகிருஷ்ணன், நகர அவைத்தலைவர் டி.குணா, ஒன்றிய துணைச்செயலாளர் எம்.கே.சங்கர், வர்த்தகர் சங்க தலைவர் கே.ஏ.ராஜா, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் டி.ஆர்.எஸ்.பாலமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பத்மபிரியா, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ஆர்.மணி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் எல்.தங்கராஜ், ஜி.சரவணன், வெங்கட், ஜே.மகேஷ், மாவட்ட பிரதிநிதி மணி என்கிற சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி கண்ணன், தொ.மு.ச. நிர்வாகி சரவணன் மற்றும் திருக்கோவிலூர் நகர மன்ற உறுப்பினர்கள் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர்-ஆசிரியர் சங்க செயலாளர் வாசுதேவன் நன்றி கூறினார்.


Next Story