திருவாரூரில், ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 27 பேர் கைது


திருவாரூரில், ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 27 பேர் கைது
x

திருவாரூரில், ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 27 பேர் கைது

திருவாரூர்

அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் ஐனநாயக வாலிபர் சங்கத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

அக்னிபத் திட்டம்

அக்னிபத் என்னும் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வீரர் தேர்வு செய்யப்படும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம் பெரியார் சிலையில் இருந்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக புறபட்டு புதிய ரெயில் நிலையத்தை அடைந்தனர். அப்போது எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

27 பேர் கைது

இதையடுத்து அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநில துணை செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் சூர்யா, மாவட்ட துணைத்தலைவர் சுகதேவ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மந்துராஜ், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 9 பெண்கள் உள்பட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story