திருவாரூரில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில், பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் இரண்டு மாதம் மின் கட்டணம் என்பதை ஒரு மாதமாக கொண்டு வரப்படும், இதனால் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் சேமிப்பு ஆகும் என கூறியிருந்தது. ஆனால் தற்போது மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் நிர்பந்தத்தால் மின் கட்டணத்தை உயர்த்தியதாக பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது.

மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டனர்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், பொதுச்செயலாளர்கள் செந்தில் அரசன், மாவட்ட செயலாளர் ரவி, நகர தலைவர் கணேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story