தூத்துக்குடி மாநகராட்சியில்விடுமுறை தினங்களில் கணினி வரி வசூல் மையங்கள் இயங்கும்


தூத்துக்குடி மாநகராட்சியில்விடுமுறை தினங்களில் கணினி வரி வசூல் மையங்கள் இயங்கும்
x

தூத்துக்குடி மாநகராட்சியில் விடுமுறை தினங்களில் கணினி வரி வசூல் மையங்கள் இயங்கும் என ஆணையாளர் தினேஷ்குமார்தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சியில் முழுமையான அளவு அதாவது 100 சதவீத வரி வசூலை மையமாக கொண்டு அதற்கான வரி வசூல் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சொத்துவரி தொடர்பான அரசாணையில் இந்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதிக்குள் செலுத்தப்படும் சொத்து வரிகளுக்கு 5 சதவிகித ஊக்குத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன் படி பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சியின் கணினி வரி வசூல் மையங்கள் இந்த மாத விடுமுறை தினங்களான 23-ந்தேதி (இன்று) 29-ந்தேதி (சனிக்கிழமை) 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாள்களில் இயங்கும், என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story