தூத்துக்குடி மாநகராட்சியில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை:மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தல்


தூத்துக்குடி மாநகராட்சியில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை:மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாநகராட்சியில் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில். 60 வார்டு பகுதிகளிலும் சாலை கழிவுநீர் ஓடை மழை நீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில், எட்டயபுரம் ரோடு, போல்பேட்டை 60 அடி சாலைப்பகுதியில் புதிதாக தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கன் ஆஸ்பத்திரி நான்கு வழித்தட முகப்பு வரை அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை தரமானதாக அமைக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார். அவர் சாலை பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

மேலும் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் முதன்மை மாநகராட்சியாக தூத்துக்குடியை கொண்டு வரும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி எல்லா பணிகளையும் முறைப்படுத்தி முறையாக நடைபெற்று வருகிறது கடந்த காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டு சாலைகள் அமைக்கும் பணி 60 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்று உள்ளது என்று தெரிவித்தார்.

ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ், கவுன்சிலர் தெய்வேந்திரன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், வட்டச்செயலாளர் முனியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story