தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக 563 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாக பணியாற்றும் 563 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாக பணியாற்றும் 563 பேர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதினர்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு 2 நாட்களாக நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த தேர்வில் மொத்தம் 5 ஆயிரத்து 411 பேர் தேர்வு எழுதினர். நேற்று 2-வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் துறை ஒதுக்கீட்டின்படி நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பித்த போலீசாருக்கான முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 705 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான தேர்வு தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் நடந்தது.
563 பேர் எழுதினர்
இந்த தேர்வில் பெண் விண்ணப்பதாரர்கள் 78 பேரும், ஆண் விண்ணப்பதாரர்கள் 485 பேரும் ஆக மொத்தம் 563 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 142 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.