தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை 'கிடுகிடு' உயர்வு


தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 4:27 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை 'கிடுகிடு' உயர்த்தி விற்கப்படுகின்றன.

தூத்துக்குடி

காய்கறிகள் வரத்துகுறைவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காய்கறி விலை உயர்ந்து வருகிறது. தூத்துக்குடி மார்க்கத்திற்கு பாவூர்சத்திரம் மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் இந்த ஆண்டு மழையின் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மார்க்கத்திற்கு காய்கறிகள் வராததால் இங்கு காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.

தக்காளி ரூ.130

தூத்துக்குடி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.130 வரையும், சின்னவெங்காயம் ரூ.160-க்கும், பல்லாரி ரூ.30- க்கும், இஞ்சி ரூ.240-க்கும், கேரட் ரூ.60 முதல் ரூ.70 வரை யும், குடை மிளகாய் ரூ.100- க்கும், சம்பா மிளகாய் ரூ.80-க்கும், சீனிஅவரைக்காய் ரூ.40-க்கும், பட்டர் பீன்ஸ் ரூ.120-க்கும், அவரை ரூ.40- க்கும், வெண்டைக்காய் ரூ.40- க்கும், கத்தரிக்காய் ரூ.30-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், சவ்சவ் ரூ.30-க்கும், பீட் ரூட் ரூ.50 முதல் ரூ.50 வரையும், மாங்காய் ரூ.40-க்கும், சேனைக்கிழங்கு ரூ.60-க்கும், எலுமிச்சை ரூ.60-க்கும் விற்பனையானது.

இந்த காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.


Next Story