திருச்செந்தூர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்


திருச்செந்தூர் கோட்டத்தில்  செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
x

திருச்செந்தூர் கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற் பொறியாளர்

விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள் மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நந்தகுமாரபுரம், தளவாயாய்புரம், கோவிந்தம்மாள் காலேஜ்ரோடு, காயாமொழி, குமாரபுரம், காந்திபுரம், சுனாமிநகர், அடைக்கலாபுரம். தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், பிச்சிவிளை, நா.முத்தையாபுரம், நாலுமூலைக்கிணறு, ஓடக்கரை, காயிதெமில்லத்நகர், காட்டுமொகுதும்பள்ளி, சேர்ந்தபூமங்களம், புன்னக்காயல், ஆறுமுகநேரி, பூவரசூர், முத்துகார்டன், சீனந்தோப்பு, பஜார்வடக்கு பகுதி, சுவாமிசன்னதி தெரு, விநாயகர் கோவில் தெரு, நாககன்னியாபுரம், வரண்டியவேல், வடக்குநல்லுர், மைக்கன்நாடார் குடியிருப்பு, அகோபாலபுரம், சிறப்பூர், பொத்தகாலன்விளை, விஜயராமபுரம், பண்டாரபுரம், புதுக்குளம், தஞ்சைமாநகரம், கொம்பன்குளம், சங்கராபுரம், ஆலங்கிணறு, மீரான்குளம், கட்டாரிமங்களம், ஆசிர்வாதபுரம், அம்பலச்சேரி, வெங்கடேசபுரம், கொமனேரி, சின்னமாடன்குடியிருப்பு, உடையார்குளம், குறிப்பன்குளம், செம்பூர், தவசிநகர், மணல்கண்டு, மானாட்டுர், செம்மறிக்குளம், எழுவரைமுக்கி, பிள்ளைவிளை, வாலிவிளை. கடாட்சபுரம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பெரியதாளைதோப்புவிளை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம், சுண்டங்கோட்டை, அம்பாள்குளம், அதிசயபுரம், பனைவிளை, புத்தன்தருவை, கடகுளம், மூனுபனைரோடு போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story