திருச்செந்தூரில்மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்


திருச்செந்தூரில்மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் 25-ந் தேதி நடக்கிறது என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.கழகம் சார்பில் ஒவ்வொருஆண்டும் ஜனவரி மாதம் 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக கடைபிடித்து வருகிறது. தாய் மொழியாம் தமிழ் மொழியை பாதுகாத்திட, பெரும் போராட்டங்கள் நடந்தன. மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டங்களில் தாய்மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இதனால் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் திருச்செந்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே வருகிற 25-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணைஅமைப்பாளர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story