திருச்செந்தூரில்விழிப்புணர்வு பேரணி
திருச்செந்தூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சியின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தீவிர தூய்மை பணிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, வடக்கு ரதவீதி, கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி வழியாக சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
பேரணியில், நகராட்சி ஆணையாளர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், தன்னார்வலர்கள், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கார்க்கி, மகளிர் சுய உதவி குழுக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story