திருச்செந்தூரில்இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில்இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகே இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், பன்னாட்டு நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், நலவாரியம் பதிவு செய்வதை அரசு எளிமையாக்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்கள் போல் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும், போக்குவரத்து அபராதங்களை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேஷ், கவுரவத் தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story