திருச்செந்தூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருச்செந்தூரில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட அந்தஸ்துக்கு உயர்ந்த வேண்டும். திருச்செந்தூர் வருவாய் கோட்டத்தை தனி வருவாய் மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். உயர்த்தப்பட்ட சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த சமூக விரோதிகளை தமிழக அரசு உடனே கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் கருத்தில் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி, கட்சி தலைமை நிலைய பொறுப்பாளர் முத்தமிழ் பாண்டியன், காயல் சமூக நீதி பேரவை செயலாளர் அகமது சாஹிப், மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வி, கலாம் மக்கள் இயக்கம ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன், செய்தி தொடர்பு மைய மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து, சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் யாசர் அராபத், திருச்செந்தூர் நகர பொருளாளர் தோப்பூர் சரண், துணை செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story