திருவாரூரில் பா.ஜனதா கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் பா.ஜனதா கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்
x

திருவாரூரில் பா.ஜனதா கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர்;

பட்டியல் இன மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை திருப்பி அனுப்பிய தி.மு.க. அரசை கண்டித்து திருவாரூரில் பா.ஜனதா கட்சி சார்பில் பிச்சை எடுத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன், மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன், மாவட்ட துணைத்தலைவர் சதா சதீஷ், மாவட்ட செயலாளர் ரவி, பொருளாளர் முருகேசன், ஒன்றிய தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story