டி.என்.பாளையத்தில் மதுபோதையில் தந்தையை தாக்கிய மகன்கள் கைது
மகன்கள் கைது
டி.என்.பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 46). இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுடைய மகன்கள் பூமணி (27), விஷ்வன் (20). கட்டிட தொழிலாளிகளான பூமணி, விஷ்வன் இருவருக்கும் மதுப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி பெற்றோரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இருவரும் மதுபோதையில் பொது இடங்களில் நின்றுகொண்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்கள். இதையறிந்த ஆண்டவர் அங்கு சென்று மகன்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன்கள் இருவரும் தந்தை ஆண்டவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கத்தியாலும் தாக்கியுள்ளார்கள். இதில் ஆண்டவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்ைசக்காக இருசக்கர வாகனத்தில் டி.என்.பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமணி, விஷ்வன் இருவரையும் கைது செய்தார்கள்.