தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்


தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் வெள்ளிக்கிழமை நடக்கிறது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை, ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று தி.மு.க தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கலைஞரின் நூற்றாண்டு விழா பட்டிமன்றம் நடக்கிறது. நாளை தூத்துக்குடி தொகுதி தி.மு.க. சார்பில் வி.வி.டி.மெயின் ரோடு டூவிபுரம் 5-வது தெரு சந்திப்பில் நடக்கிறது.

பட்டிமன்ற நடுவராக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனியும், தமிழ்நாடு வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது கலைஞரின் மக்கள் நலத்திட்டங்களே என்னும் தலைப்பில் நாகநந்தினி, பேராசிரியர் விஜயகுமார், திராவிட கொள்கைகளே எனும் தலைப்பில் கவிஞர் இனியவன், மதுரை சங்கர் ஆகியோரும் பேசுகிறார்கள்.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. சார்பில் எட்டயபுரத்தில் பட்டிமன்றம் நடக்கிறது. எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story