தூத்துக்குடி ஷிப்பிங் நிறுவனத்தில்வாட்சுமேனை அறையில் தள்ளிபூட்டிவிட்டு ரூ.1.60 லட்சம்முந்திரிக்கொட்டை திருட்டு


தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியிலுள்ள ஷிப்பிங் நிறுவன குடோனில் வாட்சுமேனை அறையில் தள்ளி பூட்டிவிட்டு, ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 18 முந்திரிகொட்டை மூட்டையை திருடி சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடியிலுள்ள ஷிப்பிங் நிறுவன குடோனில் வாட்சுமேனை அறையில் தள்ளி பூட்டிவிட்டு, ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 18 முந்திரிகொட்டை மூட்டையை திருடி சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முந்திரி குடோன்

தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ரோசரி சேவியர் (வயது49). இவர் இப்பகுதியில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அவர் பணிபுரியும் நிறுவனத்தின் முந்திரிக்கொட்டை மூட்டைகளை முத்தையாபுரம் பகுதியில் உள்ள குடோனில் வைத்திருந்தனர்.

வாட்சுமேனை அறையில் பூட்டினர்

சம்பவத்தன்று நள்ளிரவில் குடோனுக்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் வாட்ச்மேன் சிலுவை முத்துவை மிரட்டியுள்ளனர். பின்னர் செல்போனை பறித்துக்கொண்டு, அங்குள்ள ஒரு அறையில் அவரை தள்ளி பூட்டியுள்ளனர். தொடர்ந்து குடோனில் 18 மூட்டைகளில் இருந்த ரூ.1.60 லட்சம் மதிப்பிலான செல்போனை அபகரித்து, குடோனில் இருந்த ரூ.1.60 லட்சம் மதிப்பிலான 18 மூட்டை முந்திரிக்கொட்டைகளை திருடி கொண்டு தப்பி ெசன்று விட்டனர்.

4 பேருக்கு வலைவீச்சு

மறுநாள் காலையில் குடோனுக்கு சென்ற அறையில் பூட்டப்பட்டு கிடந்த சிலுவை முத்துவை மீட்டுள்ளார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குடோனில் கைவரிசை காட்டிய 4 மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


Next Story