தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில்எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக் கூட்டம்


தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில்எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக் கூட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக் கூட்டம் மூன்று நாட்கள் நடக்கிறது என மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தொகுதி வாரியாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி நாளைமறுநாள்(வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடன்குடி பஜார் அண்ணா திடலில் மாலை 5 மணி அளவில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது.

வருகிற 21-ந் தேதி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஆழ்வார்திருநகரி ஒன்றியம் பேய்க்குளம் பஜாரில் வைத்து மாலை 5 மணி அளவில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. வரும் 22-ந் தேதி தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகே எம்.ஜி.ஆர் திடலில் வைத்து மாலை 5 மணிக்கு பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. எனவே கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, மாநகர பகுதி, நகர, பேரூராட்சி, மாநகர வட்ட வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், மற்றும் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழக தொண்டர்கள், மகளிர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story