தூத்துக்குடியில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


தூத்துக்குடியில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x

தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக திங்கட்கிழமை விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் கரையில் 245 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பலத்த காற்று

தமிழகம் மற்றும் கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். அதே போன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கடலுக்கு செல்லவில்லை

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மீனவ கிராமங்களில் அறிவிப்பு செய்து உள்ளனர்.

இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மறு உத்தரவு வரை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story