தூத்துக்குடியில்குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்த குருசாமி மகன் பிரபாகரன் (வயது 26) என்பவரை ஒரு கொலை வழக்கிலும், தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த சந்திரன் மகன் மாரிமுத்து (46) என்பவரை மற்றொரு கொலை வழக்கிலும் தென்பாகம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், பிரபாகரன், மாரிமுத்து ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
Related Tags :
Next Story