தூத்துக்குடியில்காரில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் காரில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் காரில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் பறிமுதல் ெசய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ரூ.58 ஆயிரம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
2 பேர் சிக்கினர்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியேர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி கே.டி.சி.நகர் பகுதியில் காருடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி கே.டி.சி.நகரை சேர்ந்த மாரயப்பராஜ் மகன் மாரி கணேஷ் சாமிஞானராஜ் (வயது 38), தூத்துக்குடி குமரன்நகரை சேர்ந்த முத்துராஜ் மகன் இசக்கிராஜா (29) என்பது தெரியவந்தது. அவர்கள் சட்ட விரோதமாக காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
கஞ்சா-4 செல்போன்கள் பறிமுதல்
உடனடியாக போலீசார் கஞ்சா விற்பனை செய்ததாக 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 125 கிராம் கஞ்சா, ஒரு கார், ரொக்கப்பணம் ரூ.58 ஆயிரத்து 500, 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.