தூத்துக்குடியில்271 போலீசாருக்கு இடமாறுதல் கலந்தாய்வு
தூத்துக்குடியில் 271 போலீசாருக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இடமாறுதல் கலந்தாய்வு 2 கட்டமாக நடந்தது. இதில் முதல் கட்டமாக 271 போலீசாருக்கும், 2-வது கட்டமாக 267 போலீசாருக்கும் கலந்தாய்வு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. இதில் போலீசார் தாங்கள் விரும்பிய போலீஸ் நிலையங்களை தெரிவித்தனர். அந்த போலீஸ் நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப பொது மாறுதல் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டத்தில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அமைச்சுப்பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story