தூத்துக்குடியில்காணாமல் போன 3 மாணவர்கள் மீட்பு


தூத்துக்குடியில்காணாமல் போன 3 மாணவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் காணாமல் போன 3 மாணவர்களை போலீசார் மீட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவர்கள் நேற்று முன்தினம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் 3 பேரும் வீட்டுக்கு செல்லவில்லை. நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு தேடி வந்தனர். அதன்பிறகு 3 மாணவர்களும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 3 மாணவர்களும் நெல்லையில் உறவினர் வீட்டில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக 3 மாணவர்களும் மீட்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story